Monday, January 28, 2008

அ‌திக நேர‌ம் தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌க்கு‌ம் குழ‌ந்தைகளின் பெற்றோர்களுக்கு....

வீடியோ கே‌ம்‌ஸ், தொலை‌க்கா‌ட்‌சியை அ‌திக நேர‌ம் பா‌ர்‌க்கு‌ம் 6 வயது‌க்கு‌ட்ப‌ட்ட குழ‌ந்தைக‌ளி‌‌ன் பா‌ர்வை‌த்‌ திற‌ன் வள‌ர்‌ச்‌சி பா‌தி‌க்க‌ப்படுவதுட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் க‌ற்று‌‌க் கொ‌‌ள்ளு‌ம் ‌திற‌ன், வா‌சி‌க்கு‌ம் ‌திறனையு‌ம் ‌சீ‌ர்குலை‌ப்பதாக இ‌ங்‌கிலா‌‌ந்து க‌ண் மரு‌த்துவ‌ர்க‌ள் எ‌‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.குழ‌ந்தைக‌ள் தொட‌ர்‌ந்து தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதாலு‌ம், ‌வீடியோ ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் ‌நீ‌ண்ட நேர‌ம் ஈடுப‌ட்டிரு‌ப்பதாலு‌ம், பு‌த்தக‌த்‌தி‌ல் உ‌ள்ளவ‌ற்றை வா‌சி‌க்கவு‌ம், வகு‌ப்பறைக‌ளி‌ல் தா‌ங்க‌ள் அம‌ர்‌ந்‌திரு‌க்கு‌ம் பெ‌ஞ்‌‌சி‌ல் இரு‌ந்து கரு‌ம்பலகை‌யி‌ல் உ‌ள்ள எழு‌த்து‌க்களை‌ப் பா‌ர்‌க்க க‌ண்களை‌த் ‌திரு‌ப்ப இயலாம‌ல் உ‌ள்ள ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பதாகவு‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.க‌ண் பா‌ர்வை குறைபாடுகளை‌க் கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல் அது குழ‌ந்தைக‌ளி‌ன் பழ‌க்க வழ‌க்க‌த்‌தி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய ‌சி‌க்கலை உருவா‌க்‌கி‌விடுவதாகவு‌ம் மரு‌த்துவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.அமெ‌ரி‌க்கா‌வி‌ன் புக‌ழ்பெ‌ற்ற க‌ண் மரு‌த்துவ வ‌ல்லுந‌ர்களு‌ம் பெ‌ற்றோ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குழ‌ந்தைகளை ‌நீ‌ண்ட நேர‌ம் இதுபோ‌ன்ற செய‌ல்க‌ளி‌ல் ஈடுபட அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம், குழந்தைகளு‌‌க்கு அ‌வ்வ‌ப்போது க‌ண் ப‌ரிசோதனையை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.குழ‌ந்தைகளு‌க்கு பா‌ர்வை‌த்‌திற‌ன் வள‌ர்‌ச்‌சியடைய பா‌ர்வை‌த் தூ‌ண்ட‌‌ல் அ‌வ‌சியமா‌கிறது. எனவே 6 வயது‌க்கு‌ட்ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் ‌நீ‌ண்ட நேர‌ம் தொலை‌க்கா‌ட்‌சி,‌ வீடியோ ‌விளையா‌ட்டுக‌‌ளி‌ல் ‌திளை‌த்‌திரு‌க்க பெ‌ற்றோ‌ர் அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று அமெ‌‌ரி‌க்க க‌ண் மரு‌த்துவ‌ர்க‌ள் கூ‌ட்டமை‌ப்பு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது. க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் அ‌திகமாக ஈடுபடு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு வா‌சி‌க்கு‌ம் ‌திற‌ன் குறை‌ந்து ‌விடுவத‌ற்கு‌ம் தொட‌ர்பு உ‌ள்ளதாகவு‌ம், சமதள ‌திரைகளை ‌நீ‌‌ண்ட நேர‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் நமது உட‌ல் வடிவமை‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் க‌ண் நோ‌ய் ‌நிபுண‌‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். நன்றி வெப்துனியா

இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் மூளை ‌சி‌‌றியதா?

ஒரு ‌சில வ‌ரிக‌ளி‌ல் உ‌ங்க‌ள் அ‌றிவை மே‌ம்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள... கிரீன்விச் நாட்டில் இப்போது என்ன நேரம் என்று அறிய வேண்டுமா? உங்கள் கடிகாரத்தை அப்படியே தலைகீழாக பாருங்கள். அதுதான்.மரங்களே இல்லாத கண்டம் எது தெரியுமா? அண்டார்டிகா கண்டம்தான்.நாம் பிறக்கும்போது நமது உடலில் இருக்கும் எல்லா பாகமும் வளரும். ஆனால் நமது கரு விழிகள் மட்டும் வளர்வதில்லை.மனிதனின் மூளை என்றால் எல்லோருக்கும் ஒரே எடையில் இருக்குமா?இருக்காது. அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்களை விட இந்தியர்களின் மூளை எடை அளவில் சற்று குறைந்துதான் காணப்படுகிறதாம். ஆனால் எடை குறைவிற்கும் அறிவாற்றலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பிறந்த குழந்தைகள் அழுது கொண்டே தான் இருக்கிறது. ஆனால்... கண்ணீர் வருமா? இல்லைபிறந்த குழந்தைக்கு 15 நாட்கள் கழித்துத்தான் கண்ணீர் சுரப்பிகள் வளர்கின்றன.
செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலே நீடிக்குமாம்.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பாய்.அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் நாடுதான் பரிசாக வழங்கியதாம்.புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 2.6 கிலோ எடை இருக்க வேண்டும்.செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்றுத் தெரியுமா?டாக்டர் ஜெ.பிரான்டர் பெக்கன்ல் ஆண்டு 1908நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் ரத்தத்தில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

Wednesday, January 23, 2008

சேது சமு‌‌த்‌திர ‌‌தி‌ட்ட‌த்தை ம‌த்‌‌திய அரசு உடனடியாக ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்!

தமிழக மக்களின் எதிர்காலத்தை ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதிலிருந்து பின்வாங்காமல் சேது சமு‌த்‌திர திட்டத்தை ம‌த்‌திய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று ஆளுன‌ர் உரை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.ஆளுன‌ர் உரை‌யி‌ன் உரை வருமாறு: தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் - 1860 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆ‌ய்வு நடத்திடத் தொடங்கப்பெற்று; - பொறியியல் மேதைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு; சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப்பட்டதுமான - உலகத் தொடர்புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும் வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடியதுமான சேது கால்வா‌ய் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி;தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப்பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசா‌ய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடாமல் தமிழக மக்களின் எதிர்காலத்தை ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதிலிருந்து பின்வாங்காமல் - அந்த அரிய ஆக்கபூர்வமான திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. நன்றி வெப்துனியா

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும , நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்பட , 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006 ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன. டெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும , 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும , 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில , 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும , 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.பாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில , 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்ட , 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது. 7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன? 2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால , தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது. அதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.இந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில , பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்கள் என எத்தனையோ இடங்களில் ஏன்? வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்...ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும .பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது. நன்றி வெப்துனியா

ஜெயலலிதாவை பின்பற்றும் கலைஞர்... நிறுத்துவாரா?

எப்பொழுதுமே ஆட்சிக்கு யார்வந்தாலும் முன்னால் கொண்டுவந்த திட்டங்களை மாற்றுவது நடக்கும்.உதாரணம் மாவட்டம் பிரிப்பது மறுபடியும் சேர்ப்பது,எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று வைப்பது மீண்டும் அண்ணா மாவட்டம் என்று வைப்பது இது என்றுமே வாடிக்கைதான்.ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை எடுக்காமலே அதையே பின்பற்றும் அந்தஇரண்டு திட்டம்தான்.. தமிழகஅரசே நடத்தும் டாஸ்மாக்,பாலாற்றிலே மணல் எடுப்பது.இவ்விரண்டும் அரசு கஜானாவை நிரப்புவதாலே என்னவோ. கலைஞர் அவர்கள் எதிர்காலசந்ததிகளுக்கு துரோகம் இழைக்கிறார்.காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றில் எப்பவுமே வற்றாத ஜீவநதியாய் பூமிக்குள் ஓடிகொண்டிருக்கும் ஆறுதான் பாலாறு.இது தாம்பரம்,பல்லாவரம் ஊர்களுக்கும் இது குடிநீராக பயன்படுகிறது.இங்கு அரசு கிட்டதட்ட 18கிலோமீட்டருக்கு மேல் இயந்திரங்களைகொண்டு தினமும் ஆயிரக்கானலாரிகளில் மணல் எடுத்து வருகின்றன.பொருட்களை ஏற்றிசெல்லும் மூட்டைபாடி லாரிகளில் இப்பொழுது மணல் ஏற்றிசெல்கின்றன.இங்கு மணல் எடுக்கஅனுமதிப்பதே எதிர்காலசந்ததிகளுக்கு இழைககப்படும் அந்நீதியாகும். மணல் எடுப்பதால் என்ன பாதிப்பு நடந்துவிடும் என்று கேட்கலாம்.ஒரு அடிஆழம் மணல் எடுத்தால் இருபதுஅடி ஆழம் நிலத்தடிநீர் கீழ்சென்றுவிடும். இன்னும் சிலஆண்டுகளுக்குபிறகு கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்படும்.மதுபானகடை மதுவருந்துபவருக்கும்,அவர் குடும்பத்திற்க்குதான் பாதிப்பு.ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கே பாதிப்பு. மணல்தேவைக்கு மாற்றாக வேறுவழிகள் உள்ளது.அதை உற்பத்திசெய்ய அரசு தீவிரம்காட்டவேண்டும்.மணல் எடுப்பதை நிறுத்துவாரா முதல்வர்.