Monday, January 28, 2008
அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு....
வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பார்வைத் திறன் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் கற்றுக் கொள்ளும் திறன், வாசிக்கும் திறனையும் சீர்குலைப்பதாக இங்கிலாந்து கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதாலும், வீடியோ விளையாட்டுகளில் நீண்ட நேரம் ஈடுபட்டிருப்பதாலும், புத்தகத்தில் உள்ளவற்றை வாசிக்கவும், வகுப்பறைகளில் தாங்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சில் இருந்து கரும்பலகையில் உள்ள எழுத்துக்களைப் பார்க்க கண்களைத் திருப்ப இயலாமல் உள்ள நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கண் பார்வை குறைபாடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது குழந்தைகளின் பழக்க வழக்கத்தில் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.அமெரிக்காவின் புகழ்பெற்ற கண் மருத்துவ வல்லுநர்களும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீண்ட நேரம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு அவ்வப்போது கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.குழந்தைகளுக்கு பார்வைத்திறன் வளர்ச்சியடைய பார்வைத் தூண்டல் அவசியமாகிறது. எனவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகளில் திளைத்திருக்க பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்க கண் மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கணினி விளையாட்டுகளில் அதிகமாக ஈடுபடும் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறன் குறைந்து விடுவதற்கும் தொடர்பு உள்ளதாகவும், சமதள திரைகளை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் நமது உடல் வடிவமைக்கப்படவில்லை என்றும் கண் நோய் நிபுணர் கூறியுள்ளார். நன்றி வெப்துனியா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment