Wednesday, January 23, 2008
ஜெயலலிதாவை பின்பற்றும் கலைஞர்... நிறுத்துவாரா?
எப்பொழுதுமே ஆட்சிக்கு யார்வந்தாலும் முன்னால் கொண்டுவந்த திட்டங்களை மாற்றுவது நடக்கும்.உதாரணம் மாவட்டம் பிரிப்பது மறுபடியும் சேர்ப்பது,எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று வைப்பது மீண்டும் அண்ணா மாவட்டம் என்று வைப்பது இது என்றுமே வாடிக்கைதான்.ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை எடுக்காமலே அதையே பின்பற்றும் அந்தஇரண்டு திட்டம்தான்.. தமிழகஅரசே நடத்தும் டாஸ்மாக்,பாலாற்றிலே மணல் எடுப்பது.இவ்விரண்டும் அரசு கஜானாவை நிரப்புவதாலே என்னவோ. கலைஞர் அவர்கள் எதிர்காலசந்ததிகளுக்கு துரோகம் இழைக்கிறார்.காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றில் எப்பவுமே வற்றாத ஜீவநதியாய் பூமிக்குள் ஓடிகொண்டிருக்கும் ஆறுதான் பாலாறு.இது தாம்பரம்,பல்லாவரம் ஊர்களுக்கும் இது குடிநீராக பயன்படுகிறது.இங்கு அரசு கிட்டதட்ட 18கிலோமீட்டருக்கு மேல் இயந்திரங்களைகொண்டு தினமும் ஆயிரக்கானலாரிகளில் மணல் எடுத்து வருகின்றன.பொருட்களை ஏற்றிசெல்லும் மூட்டைபாடி லாரிகளில் இப்பொழுது மணல் ஏற்றிசெல்கின்றன.இங்கு மணல் எடுக்கஅனுமதிப்பதே எதிர்காலசந்ததிகளுக்கு இழைககப்படும் அந்நீதியாகும். மணல் எடுப்பதால் என்ன பாதிப்பு நடந்துவிடும் என்று கேட்கலாம்.ஒரு அடிஆழம் மணல் எடுத்தால் இருபதுஅடி ஆழம் நிலத்தடிநீர் கீழ்சென்றுவிடும். இன்னும் சிலஆண்டுகளுக்குபிறகு கடுமையான நீர் தட்டுப்பாடு ஏற்படும்.மதுபானகடை மதுவருந்துபவருக்கும்,அவர் குடும்பத்திற்க்குதான் பாதிப்பு.ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கே பாதிப்பு. மணல்தேவைக்கு மாற்றாக வேறுவழிகள் உள்ளது.அதை உற்பத்திசெய்ய அரசு தீவிரம்காட்டவேண்டும்.மணல் எடுப்பதை நிறுத்துவாரா முதல்வர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment