Wednesday, January 23, 2008
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
தமிழக மக்களின் எதிர்காலத்தை ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதிலிருந்து பின்வாங்காமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது.ஆளுனர் உரையின் உரை வருமாறு: தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் - 1860 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத் தொடங்கப்பெற்று; - பொறியியல் மேதைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு; சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப்பட்டதுமான - உலகத் தொடர்புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும் வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடியதுமான சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி;தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப்பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடாமல் தமிழக மக்களின் எதிர்காலத்தை ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதிலிருந்து பின்வாங்காமல் - அந்த அரிய ஆக்கபூர்வமான திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. நன்றி வெப்துனியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment